டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடிப்பாரா என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 34 வயதான ரூட், தனது 160 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வாழ்க்கையில், சச்சின் டெண்டுல்கரால் எட்ட முடியாத மூன்று குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளார்.
1. டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகளில் 50 அல்லது அதற்கும் அதிகமான ரன்களை எடுத்தார். ஆனால், ஜோ ரூட் அதை தாண்டி சென்று, தொடர்ந்து 12 டெஸ்ட் போட்டிகளில் 50+ ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்
2. சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 51 சதங்கள் அடித்தாலும், ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடிக்கும் அரிய சாதனையை ஒருபோதும் செய்ததில்லை. ஆனால், ஜோ ரூட் இந்த சிறப்பான சாதனையை ஆகஸ்ட் 2024 இல் இலங்கை அணிக்கு எதிராக லார்ட்ஸில் நிகழ்த்தினார்
3. சச்சின் டெண்டுல்கர் தனது 200 டெஸ்ட் போட்டிகளில் 115 கேட்சுகள் மட்டுமே பிடித்திருந்தார். ஆனால், ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் (213 கேட்சுகள்) தற்போது முன்னணியில் உள்ளார். இந்த சாதனை உடனடியாக முறியடிக்கப்படுவது கடினம்.