Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அணியில் கேதார் ஜாதவ்: தொடரும் தோனியின் பிடிவாதம்

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (20:14 IST)
மீண்டும் அணியில் கேதார் ஜாதவ்: தொடரும் தோனியின் பிடிவாதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளதை அடுத்து சரியாக விளையாடாத கேதார் ஜாதவ் இன்றைய போட்டியில் மீண்டும் அணியில் இடம் பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தோனி வழக்கமாக ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்த முடிவிலிருந்து விரைவில் மாற மாட்டார். அந்த வகையில் இன்று எந்த மாற்றமும் செய்யாமல் பிடிவாதமாக முந்தைய அணியை அப்படியே களமிறக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறைந்தபட்சம் சாம் கர்ரன் போன்ற வீரர்களை முதலில் இறக்கினால் அதிகபட்ச ரன்களை எதிர்பார்க்கலாம் ஆனால் அதையும் இன்று செய்வாரா என்பது கேள்விக்குறியே. தோனி தனது அணியில் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை எனினும் பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பதும், அந்த அணி 7 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் மற்றும் சென்னை அணி இன்று வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments