Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது அரையிறுதிப் போட்டி – நியுசி தொடர்ந்து பேட்டிங்

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (15:07 IST)
நேற்று மழையால் பாதிக்கப்பட்ட முதல் அரையிறுதி போட்டி ரிசர்வ்டு நாளான இன்று தொடங்கியுள்ளது.

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதின. போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் இன்று மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்தாலும் போட்டிக் குறித்த நேரத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுக்க ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முதல் விக்கெட்டாக குப்தில் 1 ரன்னில் வெளியேற, அதன் பின் வந்த கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். ஆனாலும் ரன்ரேட் விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் வண்ணம் இந்திய பவுலர்கள் சிறப்பாக வீசினர்.

சீரான இடைவெளியில் நிக்கோல்ஸ் (28), வில்லியம்ஸன்(67), நீஷம் (12), காலின் டி ஹிராண்ட்மோம்(16) என விக்கெட்கள் விழ அந்த அணியின் ராஸ் டெய்லர் மட்டும் 67 ரன்களோடு களத்தில் இருந்தார். இதற்கிடையில் 46.1 ஓவர்களில் மழைக் குறுக்கிடவே போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் மழைக் கொட்டித் தீர்த்தாதால் போட்டி ரிஸர்வ்டு நாளான இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை இல்லாத காரணத்தால் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. நியுசிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments