Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹானே அபார சதம்: டெல்லிக்கு 192 ரன்கள் இலக்கு கொடுத்த ராஜஸ்தான்

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (21:39 IST)
இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில்  6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே அபாரமாக விளையடி சதமடித்தார். அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் அடித்தார். கேப்டன் ஸ்மித், ரஹானேவுடன் இணைந்து விளையாடி அரைசதம் அடித்தார். 
 
டெல்லி அணியை பொருத்தவரையில் அந்த அணியின் அக்சார் பட்டேல், கிறிஸ் மோரீஸ் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சாம்சன் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாத நிலையில் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடவுள்ளது. இலக்கு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் டெல்லி அணியில் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்க்ராம் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments