Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிடில் ஓவர்களில் அஸ்வின் கைகொடுத்தார்… ரோஹித் ஷர்மா புகழாரம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:58 IST)
இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினை கேப்டன் ரோஹித் ஷர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான அஸ்வின், சில ஆண்டுகளாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு டி 20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இதையடுத்து நேற்றைய போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்காக சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.

அதன் பின்னர் அவர் விளையாடிய உலகக்கோப்பை போட்டிகள் மற்றும் நியுசிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி கலக்கி வருகிறார். இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ‘நியுசிலாந்து தொடரில் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்து. இரண்டு போட்டிகளில் நியுசிலாந்து வீரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். ஆனால் நடு ஓவர்களில் நமது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக நடிவரிசையில் அஸ்வின் துல்லியமாக பந்துவீசுகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் திரும்பினாலும் அவர் திறமையில் குறைவு இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

‘வந்துட்டோம்னு சொல்லு’… தொடர்ந்து நான்கு வெற்றிகள்… புள்ளிப் பட்டியலில் மேலே வந்த பல்தான்ஸ்!

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments