Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் குடும்பத்தைத் திட்டாதீர்கள் – ரசிகர்களுக்கு மாலிக் வேண்டுகோள் !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (15:29 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர்களில் ஒருவரான சோயிப் மாலிக் கிரிக்கெட் தோல்விக்காகத் தங்கள் குடும்பத்தைத் திட்டாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் நடந்த போட்டில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றிக்குப் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணிக்கோ கடுமையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஹோட்டல்களில் பீட்சா போன்ற உணவுகளை உண்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வீரர்கள் மேல் கண்டனங்களை எழுப்பின. இதனால் கடுப்பான சோயிப் மாலிக் ‘ ரசிகர்கள் எங்கள் குடும்பத்தின் மீது உரிய மரியாதை வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மோசமான முறையில் யாரையும் விவாதத்துக்கு அழைக்க முடியாது. நான் 20 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடி வருகிறேன். ஆனால் இன்னமும் நான் என்னைப்பற்றி விளக்கம் அளிப்பது  வேதனையாக உள்ளது. ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் போட்டிக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது அல்ல. அதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ஊடகங்கள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படப் போகின்றன எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments