Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா வேண்டாம்… இவரை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக போடலாம் – கவாஸ்கர் கருத்து!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (11:09 IST)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேப்டன் விராட் கோலி திடீரென இரு தினங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், டி20 அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு நாள் கேப்டன் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இது ரசிகர்கள் மட்டும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலேயெ மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்து கேப்டனாக நியமிக்கப்பட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போது துணைக் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘அடுத்த கேப்டன் யார் என்பது தேர்வுக்குழுவில் ஒரு விவாதமாக இருக்கும். நீங்கள் என்னைக் கேட்டால் நான் ரிஷப் பண்ட்டை அடுத்த கேப்டனாக பார்க்கிறேன். ஏனென்றால் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியை முன்னோக்கி எடுத்து செல்லும் திறமை இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments