Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலு தூக்குதல் போட்டியில் தமிழக அணிக்கு வெண்கல பதக்கம்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (16:42 IST)
சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் 43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர். தமிழகத்திலிருந்து இதில் 22 பேர் கலந்து கொண்டனர்.
 
ஆண்களுக்கான 93 கிலோ பிரிவில் 690 கிலோ தூக்கி சென்னை வீரர் எம்.நந்தகுமார் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றார். அதேபோல் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 47 கிலோ பிரிவில் சேலத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் 237.5 கிலோ தூக்கி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றார்.
இதன்மூலம் தமிழகம் தேசிய வலுதூக்குதல் போட்டியில் 2 வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments