Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று பலப்பரிட்சை: நியூசிலாந்துடன் மோதுவது யார்?

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (08:48 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன,
 
நடப்பு சாம்பியன், இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை தவிர பெற்ற 7 வெற்றிகள், 8வது முறையாக இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பு என ஆஸ்திரேலியா அணிக்கு பல பாசிட்டிவ்கள் உள்ளன. வார்னர், பின்ச், மாக்ஸ்வெல், ஸ்மித் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள், ஸ்டோனிஸ், ஸ்டார்க், மாத்யூ போன்ற பலம் மிக்க பந்துவீச்சாளர்கள் இருப்பது இந்த அணிக்கு கூடுதல் பலம்
 
அதேபோல் இங்கிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய பலம். லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருந்தாலும் மோர்கன், ஆர்ச்சர், பெயர்ஸ்டோ, பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல் வுட், வோக்ஸ், ரஷித், பிளங்கிட் போன்ற பந்துவீச்சாளர்கள் இன்று தங்கள் முழு திறமையையும் நிரூபீப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே கடந்த 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தகுதி பெற்றிருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த ஆண்டு கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பை இங்கிலாந்து அணி பயன்படுத்தி கொள்ளும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments