Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை எவை?

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (14:11 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது காலிறுதி போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. 
 
இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் உருகுவே அணியும் பிரான்ஸ் அணியும் மோதுகின்றனர். இரண்டு முறை உலக கோப்பையை வென்ற உருகுவே அணி இந்த உ;லகக்கோப்பை போட்டியில் ஒரு தோல்வியை கூட அடையாமல் தொடர் வெற்றி பெற்று வருகிறது. முதல் லீக் ஆட்டத்தில் எகிப்து அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது ஆட்டத்தில் அரேபியாவை 1-0 என்ற கோல்கணக்கிலும், மூன்றாவது ஆட்டத்தில் ரஷ்யாவை 3-0 என்ற கோல்கணக்கிலும் தோற்கடித்துள்ளது. அதேபோல் நாக் அவுட் போட்டியில் போர்ச்சுக்கல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. 
 
உருகுவே அணியை போலவே பிரான்ஸ் அணியும் இந்த தொடரில் தோல்வி அடையவில்லை. லீக் ஆட்டங்களில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், 1-0 என்ற கணக்கில் பெருவையும் வீழ்த்தி இருந்தது. டென்மார்க்குடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.
 
 
அதேபோல் இரண்டாவது காலிறுதி போட்டியில் பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணிகள் மோதவுள்ளது. 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டங்களில் கோஸ்டாரிகாவை 2-0 என்ற கணக்கிலும், செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வென்றது. சுவிட்சர்லாந்துடன் 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது சுற்றில் மெக்சிகோவை இரண்டு கோல்போட்டு வீழ்த்தியது. பெல்ஜியை அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த அணி ‘லீக்’ ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) ஆகிய அணிகளை வென்று நாக் அவுட் சுற்றில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. 
 
எனவே இன்று நடைபெறும் இரண்டு காலிறுதி போட்டிகளும் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமையும் என்றே கருதப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments