Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலரை கரம்பிடித்த அமலா பால்… ரசிகர்கள் வாழ்த்து மழை!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (07:24 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அவர் நடித்த கடாவர் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி சிறிய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் அமலா பால் தன்னுடைய பிறந்தநாளில் அவரின் புதுக்காதலரை அறிமுகம் செய்தார். ஜெகத் தேசாய் என்பவருடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இந்த காதலை வெளிப்படுத்திய அவர், இப்போது ஜெகத் தேசாயைக் கரம்பிடித்துள்ளார். அவர்களின் திருமண புகைப்படங்கள் ரசிகர்கள் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

மீண்டும் இணைகிறதா சிறுத்தை சிவா & கார்த்தி கூட்டணி?

அடுத்த கட்டுரையில்