தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் பிரணிதா.
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
மிகவும் நெருக்கமான உறவினர்கள் நண்பர்களோடு எளிமையான முறையில் பெங்களுருவில் திருமணம் நடந்துள்ளது. பிரணிதாவின் நீண்ட நாள் காதலரான நிதின் ராஜு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்ததை அறிவித்தார்.
இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அவர் தனது கணவர் நிதின் ராஜுவுக்கு பாதபூஜை செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.