Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன அனிருத்!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (07:49 IST)
மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி பிரபலம் ஆனவர் அனிருத். அவரின் முதல் படமான ‘3’ ல் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறிடி என்ற பாடல் உலக வைரல் ஆனது. அதையடுத்து அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அனிருத்தான் இசை. தமிழ் தாண்டி இப்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் இசையமைக்க தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளையும் செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் இசையில் தேவரா படம் ரிலீஸான நிலையில், அடுத்து வேட்டையன் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் அவர் தசரா இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா மீண்டும் நானியோடு இணையும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments