Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அக்கினேனியை தப்பாக பேசவில்லை… நடிகர் பாலகிருஷ்ணா விளக்கம்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:40 IST)
பாலகிருஷ்ணாவின் பேச்சால் அதிருப்தி அடைந்த நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா “அக்கினேனி தொக்கினேனி” எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள அக்கினேனி குடும்பத்தினரின் வாரிசான நாக சைதன்யா ”தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்கள் தூண்களாகவும், நம் சினிமாவுக்கு பெருமையாகவும் அமைந்தவர்கள். அவர்களை நாம் மரியாதைக் குறைவாக பேசுவது நம்மையே நாம் தரம்தாழ்த்திக் கொள்வது போன்றது” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இப்போது பாலகிருஷ்ணா இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் அக்கினேனி சித்தப்பாவை தப்பாக பேசினேனா?. அவர் தன் சொந்த குழந்தைகளை விட என் மேல் அதிக பாசமாக இருப்பார். நான் சொல்ல வந்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments