Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவின் மகன் இயக்கும் புதிய படம்!

Webdunia
புதன், 24 மே 2023 (20:53 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும்  நடிகருமான மனோஜ்  இயக்கவுள்ள முதல் படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் ஹீரோவாக அறிமுகமான படம் தாஜ்மஹால். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூன், கடல் பூக்கள்  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த மாநாடு என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் மனோஜ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் 'மார்கழி திங்கள்' என்ற படத்தின் மூலம்  மனோஜ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரடெக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

ஆன்லைன் விமர்சனங்களுக்கு ‘உள்நோக்கம்’ உள்ளது.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதிருப்தி!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

தெலுங்கில் கால்பதிக்கும் சூரி… முதல்முறையாக இருமொழிப் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments