Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்துகொள்ள உள்ள கமலின் விக்ரம் பட நடிகை!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (09:19 IST)
பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் பற்றிய ஊகங்கள் எழுந்துள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதும், விரைவில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சீசன் 6 ல் விஜய் டிவியின் பல சீரியல்களில் நடித்தவரும் சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தவருமான மைனா நந்தினி ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments