Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வெட்டு கூட இல்லாமல் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் பத்மாவதி; அங்கீகரித்த சென்சார் போர்டு

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (11:33 IST)
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படம் ஒரு வெட்டு கூட இல்லாமல் பிரிட்டிஷ் திரைப்பட சான்றிதழ் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு டிசம்பர் 1ஆம் தேதி பிரிட்டனில் வெளியாக உள்ளது.


 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இதில் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்வமாதி ராணி கதாபாத்திரத்தில் தீபிகா நடித்துள்ளார். படத்தை பார்க்காமலே வரலாற்றை மாற்றி படம் எடுத்துள்ளதாக பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக கார்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
அவர்களை தொடர்ந்து ஹரியானா மாநில பாஜக தலைவர் தீபிகா தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.5 கோடி பரிசு என அறிவித்து சர்ச்சையை எழுப்பினார். இதையடுத்து பத்மாவதி திரைப்படத்தை வெளியிட கூடாது என நாடு முழுவது பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
பத்மாவதி பட குழுவினர் நாட்டின் முக்கிய பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து திரையிட்டனர். அதை பார்த்த பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி, பத்மாவதி படத்திற்கு சென்சாரில் ஒரு வெட்டு கூட தேவையில்லை. இந்த படம் வெளியான பின்பு இதை எதிர்த்தவர்கள் முற்றிலும் முட்டாள்களாக பார்க்கப்படுவார்கள். படத்தில் ஒரு காட்சியில் கூட ரன்வீர் சிங்கும், தீபிகாவும் இணைந்து நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் பிரிட்டனில் பத்மாவதி திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்ட நாளில் வெளியாக உள்ளது. படத்தில் பிரிட்டிஷ் திரைப்பட சான்றிதழ் குழு ஒரு வெட்டு கூட இல்லாமல் 12A சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது 12வயதுக்கு மேற்பட்டோர் இந்த படத்தை பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments