Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சி & அனுராக் காஷ்யப் நடிக்கும் புதிய திரைப்படம்… பிரபல நடிகர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Webdunia
சனி, 14 மே 2022 (15:42 IST)
இயக்குனர் சுந்தர் சி இப்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர்.இதற்கு முன்பு அவர் முருகதாஸ் இயக்கிய பாலிவுட் படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்திலும் வில்லனாக தோன்றியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர், சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை திரிஷா நடித்த பரமபத விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் திருஞானம் இயக்கி வருகிறார்.  இந்த படத்துக்கு ’ஒன் டு ஒன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் பிரபல நகைச்சுவை நடிகர் சாம்ஸ், படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரோடு இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர, அது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments