Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையே காலி செய்த தீபிகா படுகோன்- முதலாளி ஹாப்பியோ ஹாப்பி...!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (16:40 IST)
நடிகை தீபிகா படுகோன் தன் திருமணத்திற்காக ஒரே கடையில் ஒரு கோடி ரூபாய்க்கு நகை வாங்கியுள்ளார். 
பாலிவுட் திரையுலகின் பிரபலங்களான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர்.  இந்த நிலையில், இவர்களது திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கல்யாண கலையோடு உலா வரும் தீபிகா படுகோன் திருமண ஏற்பாடுகளில்  தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்காக தீபிகா படுகோன் ஒரு கோடி ரூபாய்க்கு நகை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அவர், மும்பை அந்தேரியில் உள்ள பிரபல நகைக்கடையில், வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கியுள்ளார். பத்மாவதி படத்தில் அணிந்ததை விட கொஞ்சம் சிறிய நெக்லஸ் மற்றுமொரு சிறிய நெக்லஸ் வாங்கிய தீபிகா படுகோன்,  200 கிராமில் புதுமாப்பிள்ளை ரன்வீர் சிங்குக்காக செயின் ஒன்றையும் வாங்கியுள்ளார். 
 
கடையை மூடி பணியாளர்கள் வீடு திரும்பும் நேரத்தில் தீபிகா படுகோன் வந்ததாகவும், வந்த சிறிது நேரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வாங்கிச் சென்றதாகவும் நகைக்கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்