என் தந்தையை நடிப்பு ரீதியாக தோற்கடிக்க முயல்வேன்… துருவ் விக்ரம் கருத்து!

vinoth
திங்கள், 13 அக்டோபர் 2025 (08:18 IST)
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் விக்ரம் ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா படம் மூலமாக் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘மகான்’ திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். ஆனால் ‘பைசன்’ படம்தான் தன்னுடைய முதல் படம் என்று துருவ் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபது, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்த படம் சம்மந்தமாகப் பேசியுள்ள துருவ் “இந்த படத்துக்காகதான் நான் முதல் முறையாக கபடி விளையாடினேன். படப்பிடிப்பின் போது எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. என் தந்தையோடு என்னை ஒப்பிட முடியாது. ஆனால் நடிப்பு ரீதியாக அவரைத் தோற்கடிக்க நான் முயற்சி செய்வேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments