Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாளத்தில் படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தும் கௌதம் மேனன்!... ஹீரோ யார்?

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (09:06 IST)
பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான படம் “வெந்து தணிந்தது காடு. அந்த படத்துக்குப் பிறகு நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் கௌதம் மேனன். இதற்கிடையில் நடிப்பில் கவனம் செலுத்தும் அவர் அதிகளவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முக்கிய வேடத்தில் சிம்புவின் பத்து தல படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து கருமேகங்கள் கலைகின்றன, விஜய்யின் லியோ உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள அவர் இப்போது மலையாள சினிமாவிலும் நடிகராக அதிக படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் மம்மூட்டியுடன் பஜூக்கா என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் வேலைகளில் இறங்கியுள்ள அவர் அடுத்த ஆண்டு மலையாளத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன் படத்தில் நடிக்க மம்மூட்டி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments