Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டையாடு விளையாடு 2 எப்போது தொடங்கும்.. இயக்குனர் கௌதம் மேனன் அப்டேட்!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (08:35 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் டிஜிட்டலில் புத்துருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது. நேற்று புதுப் படங்கள் 7 ரிலீஸான நிலையிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பல திரைகளில் முதல் காட்சி ஹவுஸ்புல்லாக ஓடியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இப்போது பார்த்தாலும் படம் கூஸ்பம்ப் மொமண்டை தருகிறது’ என சிலாகித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது பேசிய கௌதம் மேனன் “படத்தை பெரியளவில் ரிலீஸ் செய்தார்கள். விநியோகஸ்தர்களும் ஹவுஸ்புல் என்றார்கள். அது எனக்கு சர்ப்ரைஸ்தான். இரண்டாம் பாகத்திலும் ராகவனுக்கும் ராயபுரம் மணிக்கும் காட்சிகள் இருக்கும். அப்படிதான் திரைக்கதை எழுதி கமல்சாரிடம் சொல்லியுள்ளேன். என்னுடைய அடுத்த படமான துருவ நட்சத்திரம் வெளியான பிறகு, கமல் சாரின் படங்களைப் பொறுத்து வேட்டையாடு விளையாடு 2 தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments