Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறாரா கே ஜி எஃப் யாஷ்?

பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறாரா கே ஜி எஃப் யாஷ்?
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:15 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. பல மொழி இயக்குனர்கள் யாஷுக்குக் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில்தான் அடுத்து யாஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கீது மோகன்தாஸ் ஏற்கனவே லையர்’ஸ் டைஸ் படத்தை இயக்கி கவனம் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!