விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங்கை பெரும்பகுதி முடித்துள்ள கமல் அடுத்து பிரபாஸின் கல்கி 2898 படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இப்போது கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு கமல் ஹெச் வினோத் படத்தை தொடங்க 2025 ஆம் ஆண்டு ஆகிவிடக் கூடும் என சொல்லப்படுகிறது.
இதனால் இப்போது இயக்குனர் வினோத் அடுத்து தன்னுடைய படமாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.