விஜய்க்குப் பக்கா farewell படமாக ‘ஜனநாயகன்’ இருக்கும்- எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹெச் வினோத்!

vinoth
சனி, 20 செப்டம்பர் 2025 (09:10 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் வினோத் “விஜய் சாருக்கு ஒரு பக்காவான கடைசிப் படமாக ஜனநாயகன் இருக்கும். மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளை எதிர்பார்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு வரலாம்.  ஒரு திருப்தியான விருந்து சாப்பாடு போல படம் நிறைவாக இருக்கும்” எனக் கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments