Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பாகம் உறுதி… மீண்டும் தொடங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:36 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு பின்பகுதியில் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டுதான் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது படம் இன்னும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments