Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் நடிப்பில் உருவாகும் ஸ்டார் படத்தின் ரிலீஸ் திட்டம்!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:25 IST)
ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படமான பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் இந்த படம் சிலபல காரணங்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் கைவிடப்பட்ட ஸ்டார் படத்தை டாடா புகழ் கவின் நடிப்பில் மீண்டும் தொடங்கி முடித்துள்ளார் இயக்குனர் இளன். இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் ஆதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments