Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரிபாட்டா’…. வெளியான சென்சார் தகவல்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (15:05 IST)
மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி  சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபட்டா படத்தின் ரிலீஸ் மே 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்காரு வாரிபட்டா என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்த படத்தின் டீசர் இணையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

படத்தின் ரிலிஸ் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் ஜனவரி மாதம் தெலுங்கில் பல பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் ரிலீஸாக உள்ளதால் சர்காரு வாரிபட்டா படத்தின் ரிலீஸை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக படக்குழு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது மறுபடியும் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டு மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாக மகேஷ் பாபுவின் படங்களில் ஆக்‌ஷன், காதல், செண்ட்டிமெண்ட் என கலந்துகட்டி இருக்கும். அதுபோலவே சர்காரு வாரிபட்டா படத்தின் டிரைலரும் அமைந்துள்ளது. இந்நிலையில் முதல்முறையாக தெலுங்கு பிராந்திய மொழிப்படம் ஒன்றுக்கு டிவிட்டரில் தனி எமொஜி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பேன் இந்தியா படங்களுக்கு மட்டுமே இதுபோல எமோஜிகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இன்று இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments