Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக் மோகனின் ரி எண்ட்ரி படத்தின் தலைப்பு இதுதான்… படக்குழு அறிவிப்பு!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (15:17 IST)
மைக் மோகன் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிக்கும் படத்துக்கு ஹரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் தலைப்பும் முதல் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஹரா என்று இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

த்ரிஷாவுக்கு ஒரு குத்துசாங்.. ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த சூப்பர் பாடல்.. எந்த படத்திற்கு?

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா…? கசிந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments