Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் நடிக்கும் ரி எண்ட்ரி படம் ஹரா… வெளியான ஷூட்டிங் அப்டேட்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (14:28 IST)
மோகன் நடிக்கும் ஹரா படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தனது இளமைக் காலத்திலேயே மென்மையான கதாநாயகனாக நடித்து வந்த மோகன் இப்போது முதல் முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்திருக்கும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments