Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த பொன்னியின் செல்வன்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (09:24 IST)
கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் எனும் மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவில் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்தவை 2.0 மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்கள் தான். இப்போது  மூன்றாவது படமாக பொன்னியின் செல்வன் இணைந்துள்ளது.

Edited by Vinoth

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“ஸ்ரீ பற்றி வரும் விஷயங்கள் என் வேலையைப் பாதிக்கின்றன… “- லோகேஷ் கனகராஜ் வருத்தம்!

எம் ஜி ஆர் காலத்துக் கதை… ஸ்டைலான மேக்கிங்… வொர்க் அவுட் ஆனதா கார்த்திக் சுப்பராஜின் ‘ரெட்ரோ’?

மலை போல மாமன் இருக்கேன்… சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

இன்னும் எவ்ளோதான் கடன் இருக்கு?- DD நெக்ஸ்ட் லெவல் டிரைலரைப் பார்த்து கௌதம் மேனனைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ!

அடுத்த கட்டுரையில்
Show comments