கோமாளி படத்தின் மூலம் தன்னை ஒரு வணிக இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
அதன் பின்னர் அவர் நடித்த டிராகன் திரைப்படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸாகவுள்ளது.
இதற்கிடையில் அவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் Dude படத்தின் மூலம் பேன் இந்தியா ஹீரோவாக செல்லவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கீர்த்திவாசன் என்பவர் இயக்குகிறார். மமிதா பைஜு கதாநாய்கியாக நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் தலைப்புக்கு கன்னட சினிமாவில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. கன்னடத்தில் ஏற்கனவே இதேப் பெயரில் ஒரு படம் உருவாகி வருவதால் கன்னடத்தில் மட்டும் தலைப்பை மாற்றவேண்டியக் கட்டாயம் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.