Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் பட ஒளிப்பதிவாளர் காலமானார்

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:43 IST)
தமிழ் திரைப்படவுலகின் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம் இயற்கை எய்தினார்.
 
எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர்.பாரத், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டி.எஸ்.வினாயகம்(70), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் 
 
இதை தொடர்ந்து நேற்று சென்னையில் அவர் காலாமானார். டி.எஸ்.வினாயகம், பிரபல ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து, பின்னர் ஒளிப்பதிவாளராக சினிமா துறையில் உயர்ந்தார்.
 
ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்க, ரஜினி நடித்த மிஸ்டர்.பாரத், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், குரு சிஸ்யன் உள்ளிட்ட எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
இந்நிலையில் இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த வினாயகத்தின் இறுதிச்சடங்கு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு குன்றத்தூர் அருகில் உள்ள பூந்தண்டலம் கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments