Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் மீது வழக்கு தொடுத்த லைகா நிறுவனத்திற்கு அபராதம்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (18:36 IST)
விஷால் மீது வழக்கு தொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் நீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகர் விஷால் மீதும் அவர் நடித்த ’சக்ரா’ படத்தின் மீதும் லைக்கா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது
 
இந்த தீர்ப்பில் விஷால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அதுமட்டுமின்றி பொய்யான வழக்கை விஷால் மீது தாக்கல் செய்வதற்காக லைக்கா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீதி வெல்லும், உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புவேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் ‘சக்ரா’ திரைப்படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments