Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலார் படத்தின் ஓடிடி பிஸ்னஸ் நிறைவு… விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி?

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (12:41 IST)
பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் சமீபத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.மேலும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு  சலார் திரைப்படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமையை அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வராததும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி பிஸ்னஸ் முடிந்துள்ளதாகவும், அதனால் விரைவில் சலார் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments