Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்சீரிஸுக்கு வந்துவிட்ட சத்யராஜ்: இயக்குவது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (20:13 IST)
திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக நடித்துக் கொண்டிருக்கும் பலர் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி உள்ள நிலையில், வெப் சீரீஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அதிலும் புகழ் மற்றும் பணம் சம்பாதிக்கலாம் என்பதே அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது
 
ஏற்கனவே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி உள்ளிட்ட பலர் வெப்சீரிஸ்ஸில் வரை நடித்து வருகின்றனர். அதேபோல் பிரசன்னா, பாபி சிம்ஹா, உள்பட பல நடிகர்களும் வெப்சீரிஸ்ஸில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வில்லன் மற்றும் ஹீரோ வேடங்களில் கலக்கிய சத்யராஜும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த வெப்சீரிஸ்ஸை இயக்குனர் தாமிரா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ரெட்டைசுழி மற்றும் ஆண்தேவதை ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் நகைச்சுவை குடும்ப சென்டிமென்ட் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த சீரிஸில் சத்யராஜுடன் சீதா மற்றும் சுகன்யா ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments