சமீபகாலமாக விஜய்யின் ரி ரிலீஸ் படங்கள் நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. அவரின் கில்லி மற்றும் சச்சின் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த ரி ரிலீஸ் படங்கள் என்ற சாதனையைப் பெற்றுள்ளன.
இதையடுத்து விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக குஷி ரி ரிலீஸாகவுள்ளது. விஜய், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த குஷி திரைப்படம் வரும் 25 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரி ரிலீஸாகிறது.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தபோது கலந்துகொண்ட இயக்குனர் எஸ் ஜே சூர்யா பேசும்போது “இந்த படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிபுடிடா பாடல் அதிகமுறை ஒன்ஸ்மோர் கேட்கப்பட்ட பாடல். ஒரு கவர்ச்சிப் பாடலுக்கு இவ்வளவு வரவேற்பா? இந்த பாடலுக்கு உந்துதலே செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பழைய பாடல்தான். அந்த பாடல் மாதிரி வேண்டும் என்று தேவா சாரிடம் சொன்னேன். அதைக் கேட்டு அவர் போட்ட பாடல்தான் கட்டிபுடி கட்டிப்புடிடா பாடல்.” என தெரிவித்துள்ளார்.