Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டர் ஃப்ளாப் ஆன படம்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டசூப்பர் ஸ்டார்

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (12:27 IST)
இந்தி சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படத்தின் தோல்வியால் அமீர்கான் வருத்தத்தில் உள்ளார். 
தீபாவளியை ஒட்டி வெளியான ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’  ரசிகர்களை கவரவில்லை. இதில் அமிதாப் பச்சனும், அமீர்கானும் முதன் முறையாக இணைந்து நடித்து இருந்தனர். விஜய் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தை 300 கோடி செலவு ஆதித்யா சோப்ரா நிறுவனம் தயாரித்து இருந்தது. காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தும் கதையில் கோட்டைவிட்டதால் 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’  வந்த வேகத்தில் பெட்டிக்குள் திரும்பியது. இதனால் அமீர்கான் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்தோம். ஆனால் எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. பெரும்பாலான ரசிகர்களால் இந்தப் படம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விட்டது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு படத்திற்கு வரும் மக்கள், அந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வருகிறார்கள். அப்படி வந்தவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை. இந்த முறை நான் என்னை நம்பி வந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்த தவறிவிட்டேன். அதற்காக என் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments