Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரின் ''காட்பாதர்'' பட முக்கிய தகவல்...

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (16:49 IST)
சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள காட்பாதர் படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.  இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது.

எனவே  மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததுள்ளது.

இப்படத்தில் சல்மான் கான் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஜூலை 4 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படக்குழுவினர் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தப்படி  மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு  நேற்று  காட்பாதர் டீசர் வெளியானது.
இந்த  டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், படமும் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த  நிலையில்,  காட்பாதர் படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை வெளியான சூப்பர் ஸ்டார் படங்களில் இப்படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், இப்படம் சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments