Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு குரலில் ''மாமன்னன்'' பட முதல் சிங்கில் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (17:15 IST)
ஏ.ஆ.ரஹ்மான் இசையில்  நடிகர் வடிவேலு  பாடியுள்ள மாமன்னன் பட முதல் சிங்கில் தற்போது ரிலீஸாகியுள்ளது. 

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் வைகைப்புயல்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன்  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின்  ஷூட்டிங் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடெக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மாமன்னன்  பட முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில் வடிவேலுவின் லுக் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து,  இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மே 19 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று மாமன்னன் பட முதல் சிங்கில் தற்போது ரிலீஸாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த பாடலை ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளார். பாடலாசிரியர் யுகபாரதி இந்த பாடலை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments