Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஐந்து தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்: மீண்டும் சுறுசுறுப்பாகும் திரையுலகம்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:42 IST)
இன்று ஐந்து தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்: மீண்டும் சுறுசுறுப்பாகும் திரையுலகம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு மீண்டு வந்துள்ளது
 
இன்று ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதை அடுத்து தமிழ் திரையுலகம் மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ரியோ நடித்த பிளான் பண்ணி பண்ணனும், ராய் லட்சுமி நடித்த சின்ட்ரெல்லா, ஈஸ்வர் கொற்றவை இயக்கிய சூ மந்திரகாளி, யோகி பாபு நடித்த பேய்மாமா மற்றும் முற்றிலும் புதுமுகங்கள் நடித்த சின்னஞ்சிறு கிளியே ஆகிய 5 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது
 
இதில் ரியோ நடித்த பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ராய் லட்சுமி நடித்த சின்ட்ரெல்லா, திரைப்படம் திகில் கதையம்சம் கொண்டது என்பது ஏற்கனவே டிரெய்லரில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி மற்றும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள பேய்மாமா படத்தில் யோகிபாபு மட்டும் மொட்டை ராஜேந்திரன் காமெடி சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் மீண்டும் திரையரங்குகள் பிஸியாக ரசிகர்களை நிரப்பும் அளவிற்கு நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாபாரதம் படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு?… ராஜமௌலி முடிவு!

மீண்டும் காமெடி ஏரியாவுக்குள் செல்லும் சிவகார்த்திகேயன்… முக்கிய வேடத்தில் மோகன்லால்!

ரஜினியை இயக்குகிறாரா ஹெச் வினோத்..? சமீபத்தில் நடந்த சந்திப்பு!

பான் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடிதான்… இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனம்!

பாலிவுட்டில் தொடர் தோல்வி... ஹாலிவுட் செல்லும் கங்கனா!

அடுத்த கட்டுரையில்
Show comments