சிம்பு படம் என்னாச்சு?... எப்ப அறிவிப்பு வரும்?- வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

vinoth
திங்கள், 1 செப்டம்பர் 2025 (08:13 IST)
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருந்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த படமும் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை. ஏனென்றால் சிம்பு கேட்கும் சம்பளத்தால் தாணு அந்த படத்தினைத் தயாரிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படமும் கைவிடப்படலாம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் குறித்துப் பேசியுள்ள வெற்றிமாறன் “அந்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும். அதற்கு அடுத்த என்னுடைய படமாக வடசென்னை-2 இருக்கும்.” எனக் கூறியுள்ளார். சிம்பு படத்தை வெற்றிமாறனே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வடசென்னை 2 படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments