Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 17 மே 2025 (13:25 IST)
சமீபகாலமாக நடிகர் விஷாலின் உடல்நிலைக் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.  அவர் நடிப்பில் உருவான ‘மத கஜ ராஜா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது விஷால் சரியாகப் பேசமுடியாமல் கைகள் நடுங்கப் பேசினார். ஆளும் மிகவும் இளைத்து ஒல்லியாகக் காணப்பட்டார். இதனால் அவர் உடல்நிலைக் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவின. ஆனால் அவருக்கு வெறும் வைரஸ் காய்ச்சல்தான் என்று அவரது தரப்பில் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரத்தில் உள்ள கூவாகம் திருவிழாவில் நடந்த மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டார். அப்போது மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக அவர் மயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஷால் தற்போது தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் “நடிகர் சங்கக் கட்டிடத்தை ஆகஸ்ட் மாதத்தில் திறப்போம். அதன்பின்னர் எனக்குத் திருமணம் நடக்கும். பெண் பார்த்து பேசி முடிச்சாச்சு. இன்னும் நான்கு மாதத்தில் எனக்குத் திருமணம் உறுதி” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

தெலுங்கு இயக்குனரோடுக் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷனில் கலக்கிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

அடுத்த கட்டுரையில்
Show comments