Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோன் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (10:14 IST)
அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு இசையமைத்துள்ள அம்ரேஷ் கணேஷ், சன்னி லியோன்  படத்திற்கு இசையமைக்கிறார்.
சரித்திரப் பின்னணியுள்ள  படமென்றால், அதில்  இசை முக்கியத்துவம் பெரும். பிரம்மாண்டமான தமிழ் படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தரும் செய்தி.  இது ஒரு சரித்திர பின்னணியுள்ள படமாகும். போர் காட்சிகள் நிறைந்த  இந்த படத்தில் சன்னி லியோன் இதுவரை யாரும் காணாத  அவதாரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகின்றார் , 'பொன்சே ஸ்டீபன்  தயாரிக்கிறார்.
 
இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக  வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தற்பொழுது, இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்  அம்ரேஷ் கணேஷ். 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'யங் மங் சங்', 'கர்ஜனை ', 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்களுக்கு இசையமைத்து  வருகிறார்.
 
இந்த படம் குறித்து அம்ரேஷ் கணேஷ் பேசுகையில், ''இயக்குனர் வடிவுடையான் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது வியந்து போனேன். அருமையான கதையம்சம் கொண்ட மிக பிரம்மாண்ட படம் இது. இதுபோன்ற சரித்திரப்  பின்னணியுள்ள  படத்திற்கு இசையமைப்பது சவாலான காரியமாகும். பாடல்கள் ரெக்கார்டிங்கிற்கு வெளிநாடு செல்லவுள்ளோம்.  பண்டைய கால இசை கருவிகள் பலவற்றை பயன்படுத்தி புதுவிதமான ஒலியை கொண்டுவரவுள்ளேன்” என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்