சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்ய !!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (12:30 IST)
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1/2 கப் (துருவியது)
சீஸ் - 1/2 கப் (துருவியது)
கார்ன் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப
ப்ரெட் தூள் - தேவைக்கேற்ப



செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.

இந்த உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments