Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் தக்காளி சூப் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கடாயில் வெண்ணெய்யை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
பின்னர் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பின்னர் கால் லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
 
மிதமான தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும். பிறகு 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும். சுவையான ஆரோக்கியம்  நிறைந்த தக்காளி சூப் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments