Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலிய அரசின் வெப்சைட் ஹேக்!.. Open AI CEO-வுக்கு சம்மன்!...

Advertiesment
open ai
சமீபகாலமாகவே செயற்கை நுண்ணறிவான AI மென்பொருள் துறையில் மிகவும் பிரபலமாகி வருகிறது. மென்பொருள் துறையில் வேலை வேண்டுமெனில்  AI  தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற நிலையும் தற்போது உருவாகியிருக்கிறது.

எனவே பல மென்பொருள் நிறுவனங்கள் மனிதர்களை விட AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Coding-ஐ எழுதி வாங்குகிறார்ர்கள். எனவே எதிர்காலத்தில் மென்பொருள் துறையில் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு குறையும் நிலையும் உருவாகியிருக்கிறது. சமீபகாலமாகவே கடந்த சில மாதங்களில் பல மென்பொருள்கள் மனிதர்களை வேலையை விட்டு தூக்கி விட்டன..

ஒருபக்கம் AI  ரோபோக்கள் சுயமாகவும் சிந்திக்க தொடங்கி விட்டன. குறிப்பாக OPEN AI நிறுவனத்தின் Agent AI தாமாகவே சில கட்டளைகளை தனக்கு பிறப்பித்துக் கொள்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அரசின் MEDICARE  தளத்தை ஹேக் செய்தது. அதேபோல், அமெரிக்காவின் மூன்று வெப்சைட்டுகளை OPEN AI ஹேக் செய்ய முயன்றது.

இந்நிலையில், தங்களின் MEDICARE தளத்தை OPEN AI Agent ஹேக் செய்ய முயன்றது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என OPEN AI நிறுவனத்தின் CEO சாம் ஆஸ்ட்மேனுக்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. மேலும், AI-யின் வளர்ச்சியை கட்டுப்படுத்த கோரி வரும் ANTHROPIC CEO டாரியோ அமோடிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதியவர்களுக்கு உதவி செய்யும் கூகுள் ஜெமினி.. மகனின் நெகிழ்ச்சியான பதிவு...