Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளித்துறையில் இந்தியா எங்களை முந்திவிட்டது. சீனா ஒப்புதல்

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (08:29 IST)
ஆசியாவில் வளர்ச்சி அடைந்த நாடாக கருதப்படும் சீனா, அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் வகையில் அனைத்து தொழில்துறைகளிலும் முன்னேறி வருகிறது. சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவே அண்ணாந்து பார்த்து வரும் நிலையில் விண்வெளித்துறையில் மட்டும் நாங்கள் இந்தியாவைவிட பின் தங்கி இருக்கின்றோம் என்று சீனா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.




இதுகுறித்து சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள  செய்தியில் கூறியிருப்பதாவது:

இஸ்ரோ அமைப்பு அண்மையில் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. இதில் 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. மிகக் குறைவான கட்டணம் என்பதால் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை உலக நாடுகள் நாடுகின்றன.

சீன விண்வெளி நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அதிக கட்டணம் நிர்ண யித்திருப்பதால் வர்த்தகத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் இருந்து சீனா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்முறையாக தாங்கள் இந்தியாவை விட விண்வெளித்துறையில் பின் தங்கியுள்ளதை சினா ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments