Publish Date: Tue, 23 Mar 2021 (11:45 IST)
Updated Date: Tue, 23 Mar 2021 (11:47 IST)
ஜெர்மனியில் மூன்றாவது அலை கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை கோரோனா பரவல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் ஈஸ்டர் திருநாள் நெருங்கி வருவதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள 16 மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வலியுறுத்தியுள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஈஸ்டருக்கு முன்னதாக 5 நாட்கள் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.