"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

Siva
ஞாயிறு, 15 ஜூன் 2025 (11:24 IST)
சமீபத்தில் இஸ்ரேல் ஈரானின் அணு உலைகள் மற்றும் ராணுவ இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டிக்க முயன்றார். ஆனால், அவர் வெளியிட்ட ஒரு சமூக வலைத்தள பதிவில் "கண்டனம்" என்பதற்குப் பதிலாக "காண்டம்" என தவறுதலாக டைப் செய்து பதிவிட்டது பெரும் நகைச்சுவையாக மாறியது.
 
ஷெபாஸ் ஷெரீப் தனது சமூக வலைத்தளப் பதிவில், "I condemn" (நான் கண்டிக்கிறேன்) என்பதற்குப் பதிலாக "I condom" (நான் காண்டம்) என்று தவறுதலாக தட்டச்சு செய்ததாக ஒரு ஸ்கிரீன்ஷாட் காட்டுத் தீயாகப் பரவியது. இஸ்ரேலின் தாக்குதலை கண்டனம் செய்யும் நோக்கில் எழுதப்பட்ட இந்தப் பதிவு, உடனே இணையத்தில் விவாதங்களையும், எண்ணற்ற மீம்களையும் அள்ளிவிட்டது. "பாகிஸ்தான் பிரதமர் ஈரானுக்கு ஆதரவாக 'கண்டனம்' என்பதற்கு பதிலாக 'காண்டம்' என்று தவறுதலாக எழுதினார். பின்னர் அவர் அதை சரிசெய்தார்," என்று ஒரு பயனர் ஸ்கிரீன்ஷாட்டுடன் பதிவிட்டிருந்தார்.
 
சமூக வலைத்தளங்கள் முழுவதும் சிரிப்பலைகளும், மீம்களும் குவிந்தன. "I condom this too" (நானும் இதைக் காண்டம் செய்கிறேன்) என்று பயனர்கள் அந்த வரியை மாற்றி மாற்றி பதிவிட்டு கேலி செய்தனர். சிலர் இதை "இந்த ஆண்டின் சிறந்த தட்டச்சுப் பிழை" என்றும் குறிப்பிட்டனர். 
 
இந்தப் பதிவின் உண்மைத்தன்மை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட்டைத் தவிர, நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்